;
Athirady Tamil News

பெங்களூரில் 6 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது: வீடியோ இணைப்பு..!!

0

பெங்களூரை அடுத்த கெங்கேரி அருகே உள்ளகுளோபல் வில்வேஜ் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவருக்கு 6 வயதில் மகன் உள்ளான். இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். அடிக்கடி பெற்றோரிடம் பொய் சொல்வதோடு, அவர்களின் பேச்சை கேட்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் தனது மகனை வீட்டு அறையில் வைத்து கொடூரமாக தாக்கினார்.

தாக்குதல் சம்பவத்தை மகேந்திரனின் மனைவி செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2 நிமிடம் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெற்ற மகன் என்று கூட பாராமல் மகேந்திரன் தனது மகனை சரமாரியாக தாக்குகிறார்.

முதலில் பெல்ட்டால் தாக்கும் அவர் பின்னர் செல்போன் சார்ஜர் வயரால் தாக்கினார். வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி அழ அவனை தலைக்கு மேல் தூக்கி கட்டிலில் வீசுகிறார்.

பின்னர் கட்டிலில் இருந்து இழுத்து கீழே போட்டு காலால் மிதிக்கும் காட்சிகளும்’ இடம் பெற்று உள்ளது. இது காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.

இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக கெங்கேரி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.

அந்த வீடியோ வெளியானது எப்படி என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சமீபத்தில் வீடியோ அடங்கிய செல்போனை பழுது நீக்க மகேந்திரனின் மனைவி ஒரு கடையில் கொடுத்தார். அந்த கடை உரிமையாளர் வீடியோவை பார்த்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*