;
Athirady Tamil News

வெறும் மீன் உணவுக்கு 1000 பவுண்ட்ஸ் கட்டணமா? பொலிசாருக்கு தகவல் தெரிவித்த இளைஞர்..!!

0

இத்தாலியில் வெனிஸ் நகருக்கு சுற்றுலா வந்த நான்கு இளைஞர்கள் சாப்பிட்ட மீன் உணவுக்கு 1004 பவுண்ட்ஸ் கட்டணம் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிஸ் நகருக்கு அருகாமையில் உள்ள பொலோனா நகரில் இருந்து 4 ஜப்பானிய இளைஞர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

மதிய நேரம் ஆனதால் அங்குள்ள ஒரு உணவகத்தில் நான்கு பேரும் மீன் உணவுக்கு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உணவுக்கு கட்டணமாக 1004 பவுண்ட்ஸ் செலுத்த வேண்டும் என உணவகம் கோரியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த அந்த இளைஞர்கள், குறித்த கட்டண கொள்ளை தொடர்பில் நகர தலைவர் Luigi Brugnaro அலுவகலத்திற்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞர்கள் உணவுக்கான கட்டணத்தை செலுத்தினார்களா இல்லையா என்பது வெளியிடப்படவில்லை என்றபோதும், வெனிஸ் நகரில் செயல்படும் உணவகங்களின் கட்டண கொள்ளை தொடர்பில் தொடர்ந்து புகார் வருவதாக நகர தலைவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கட்டண கொள்ளை தொடர்பில் விசாரித்து உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் இளைஞர்கள் உணவருந்திய உணவகமானது கட்டண கொள்ளைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், ஏற்கெனவே உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*