;
Athirady Tamil News

தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஜேர்மனி..!!

0

உலகில் தொழில்முனைவோர் அதிகம் கொண்ட நாடுகளில் பட்டியலில் ஜேர்மனி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

உலகில் மொத்தம் 80 நாடுகளில் குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க செய்தி நிறுவனம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.அர்ப்பணிப்பு, எதிர்கொள்ளும் துணிச்சல் உள்ளிட்ட காரணிகளால் ஜேர்மனியின் முக்கிய நகரங்கள் இந்த அரிய தகுதியை நாட்டுக்கு பெற்றுத்தந்திருப்பதாக குறித்த செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜேர்மனியின் தொழில் வளர்ச்சியானது லண்டன் மற்றும் அமெரிக்க தொழில்முனையங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பெருநகரங்களின் தொழில்முனைவோரைவிடவும் ஜேர்மனியின் பெர்லின் மற்றும் மூனிச் நகர தொழில்முனைவோர் சிறந்து விளங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

தனித்துவமான அணுகுமுறைகள் தொழிலாளர்களால் புதிய தொழில் நிறுவனங்களுடன் இசைந்து செல்ல காரணமாக அமைகின்றது எனவும், திருப்திகரமான ஊதியமும், வேலைக்கான உத்தரவாதமும் இதை சாத்தியப்படுத்தி உள்ளது எனவும் அமெரிக்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஒட்டுமொத்த காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சுவிட்சர்லாந்து மற்றும் கனடா நாடுகளுக்கு அடுத்த இடத்தில் ஜேர்மனி உள்ளது. பிரித்தானியாவை நான்காவது இடத்துக்கும் தள்ளியுள்ளது.

குறித்த பட்டியலில் செர்பியா, அங்கோலா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் கடைசி 3 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*