;
Athirady Tamil News

மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த கணவனுக்கு சிறை?..!!

0

அமெரிக்காவில் முதலாளியுடன் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கணவன் கண்டுப்பிடித்த நிலையில், சட்டவிரோதமாக கண்காணித்ததாக போடப்பட்ட வழக்கில் கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூஜெர்சியை சேர்ந்தவர் சீன் டோனிஸ் (37), இவர் மனைவி நேன்சி டோனிஸ் (38) கடந்த 2016 ஏப்ரல் மாதம் வீட்டிலிருந்து மகனின் ஐபேட்-ஐ வெளியில் எடுத்து சென்றுள்ளார்.

ஐபேட்-ஐ சீன் வீட்டில் தேடிய நிலையில் அது கிடைக்கவில்லை, இதையடுத்து ஐபோன் ஆப் மூலம் ஐபேட் எங்குள்ளது என சீன் கண்காணிக்க அதன் சிக்னல் நியூயோர்க் நோக்கி காட்டியுள்ளது.

இதையடுத்து சிக்னலை பின் தொடர்ந்து சீன் சென்ற நிலையில் ஒரு வீட்டு வாசலில் முடிவுக்கு வந்தது.அந்த வீட்டு வாசலில் நேன்சியின் கார் நின்றிருந்த நிலையில் வீட்டுக்குள் சீன் எட்டி பார்த்துள்ளார்.

அப்போது நேன்சி தனது முதலாளி ஆல்பர்ட் லோபஸுடன் படுக்கையில் இருந்ததை கண்டு சீன் அதிர்ச்சியடைந்தார்.

அந்த காட்சியை வீடியோவாக எடுத்த அவர் நேன்சியின் உறவினர்களுக்கு அதை அனுப்பியுள்ளார்.இதையடுத்து கடந்த பிப்ரவரியில் மனைவியிடமிருந்து சீன் விவாகரத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த யூலை ஆல்பர்ட், சீன்-கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சட்டவிரோதமாக தன்னை கண்காணித்தது தவறு என எழுதப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சீன் மீது நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என சீன் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால் வழக்கறிஞர் கூறுகையில், மனைவியை ஏற்கனவே சீன் பிரிந்துவிட்டதாக நினைத்த நிலையிலே நேன்சியுடன் ஆல்பர்ட் தொடர்பு வைத்திருந்தார்.

அவரின் தனிப்பட்ட விடயங்களை செல்போனில் பதிவு செய்தது தவறாகும் என கூறியுள்ளார்.இதையடுத்து சீனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + fifteen =

*