;
Athirady Tamil News

11 மாத குழந்தையின் உடலில் 16 தையல் ஊசிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி..!!

0

உஸ்பெகிஸ்தான் நாட்டில் 11 மாதமேயான குழந்தையின் உடலில் 16 தையல் ஊசிகள் சிக்கியிருந்த சம்பவம் மருத்துவர்களையே கடும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் குழு மேற்கொண்ட 9 மணி நேர அறுவைசிகிச்சைக்கு பின்னர் 13 ஊசிகளை அரும்பாடுபட்டு அகற்றியுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் தாயார் ஒருவர் தமது 11 மத குழந்தைக்கு தொடர்ந்து சில நாட்களாக விட்டுமாறாத காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவர்களை நாடியுள்ளார்.

மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தைக்கு காய்ச்சலுக்கான் காரணம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து குழந்தையை எக்ஸ்ரே எடுத்து பரிசோதிக்க முடிவு செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பிஞ்சு குழந்தையின் உடலில், இருதம், கழுத்து, முதுகெலும்பு மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட பகுதிகளில் தையல் ஊசிகள் கொத்தாக சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மருத்துவர்கள் குழு ஒன்றிணைந்து குழந்தையின் உடலில் இருந்து 13 ஊசிகளை அகற்றியுள்ளனர்.

இதில் இருதயநோய் நிபுணர் ஒருவர் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு 3 ஊசிகளை அகற்றியுள்ளார். எஞ்சிய மருத்துவர்கள் குழந்தையின் அடிவயிறு மற்றும் கழுத்தில் இருந்து 9 ஊசிகளை அகற்றியுள்ளனர்.

மேலும் இரண்டாவது அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். குழந்தையின் உடலில் ஊசியை எவரேனும் நுழைத்திருக்க வாய்ப்பு உண்டு எனக் கூறிய மருத்துவர்கள், 11 மாத குழந்தை ஒருபோதும் ஊசியை விழுங்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால் குழந்தையின் தாயாருக்கு இந்த விடயத்தில் ஏதும் தெரியாது எனவும், அவரது கணவர் ரஷ்யாவில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 7 =

*