;
Athirady Tamil News

இரண்டு கோடி விடயத்தில் எது சரியானது த.வி.கூட்டணியின் கரச்சி பிரதேச சபையின் பாரதிபுர வேட்ப்பாளர் செல்வா..!!

0

நேற்று வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவாறான ஓர் கேள்வியை எழுப்பி உள்ளார்

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டுகோடி வாங்கி இருக்கிறார்கள் அது தொடர்பில் பல செய்திகள் பத்திரிகையில் வெளிவந்துள்ளது இரண்டு கோடியை தான் வாங்க வில்லை என திரு சிறிதரன் தெரிவிக்கின்றார் இல்லை அபிவிருத்திக்கான பணம் அதனால் இவற்றை செய்திருக்கின்றேன் என திரு மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார் இதில் எது சரியானது சரி திரு மாவை சேனாதிராஜா சொல்வதைப் போல் இப்பணம் அபிவிருத்திகானது என்றால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கின்ற இக் கிளிநொச்சியின் அபிவிருத்திக்கு வந்த பணத்தை திரு சிறிதரன் வாங்காதது பிழையானது அது போல் இவர்களுக்கு இப் பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டது என்றால் திரு மாவை சேனாதிராஜா அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டது பிழையானது எனத் தெரிவித்தார்

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கடந்த மாகாண சபை வரும் போது விக்கினேஸ்வரன் என்பவர் யார் என எனக்கு தெரியாது கூட்டமைப்பினர்தான் இவர் நல்லவர் படித்தவர் நீதியரசர் என அவருக்கு கையைக்காட்டி வாக்களியுங்கள் என சொன்னார்கள் இவர்களது ஊழல்களைப் பிடித்து விட்டார் என்பதற்காக நாங்கள் யாருடன் சேரக்கூடாது என நினைத்தோமோ யாரை துரோகிகள் என நினைத்தோமோ அவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டு இப்பொழுது அவரை வெளியே அனுப்ப வேண்டும் என பிரச்சாரம் செய்கிறார்கள் இவர்கள் மக்களை என்ன என நினைத்துக்கொண்டு உள்ளார்ள் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் எமது கட்சிக்கு வாக்களியுங்கள் என கேட்கவில்லை இவர்களது கபடத்தனங்களை புரிந்து கொள்ளுங்கள் எனத் தெரிவத்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*