;
Athirady Tamil News

சிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். இது இரகசியமான காசா? லஞ்சமா?

0

சிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். அப்படியானால் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. இது இரகசியமான காசா? லஞ்சமா? அல்லது அரசுக்கு சேவை செய்வதற்கு அரசின் கைக்கூலியாக செயற்பட்டமைக்காக தரப்பட்ட பணமா என்பதை மக்களிற்கு வெளிப்படுத்துங்கள் – பொன் காந்தன் சாடல்

சிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். அப்படியானால் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. இது இரகசியமான காசா? லஞ்சமா? அல்லது அரசுக்கு சேவை செய்வதற்கு அரசின் கைக்கூலியாக செயற்பட்டமைக்காக தரப்பட்ட பணமா என்பதை மக்களிற்கு வெளிப்படுத்துங்கள் என
ஞாயிற்றுக்கிழமை வட்டக்க்சி பகுதியில் இடம்பெற்ற தமிழ் தெசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் பிச்சார கூட்டத்தில் கரைச்சி பிரதேச சபை வேட்பாளர் பொன்காந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தெசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் தலைவர் பிரபாகரன் அதிகமாக செயற்பட்டார். கிளிநொச்சி மணிணிலே பல்வேறு பிரிவுகளாக இருந்த தலைமைகள், ஆயுத குழுக்களை அழைத்து ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கு அவர் எந்த அளவு தூரம் செயற்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வாறு உருவாக்கப்பட்ட திமழ் தேசிய கூட்டமைப்பில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாராளும்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்காக நாம் ஈபிஆர்எல்எப் கட்சியின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றோம்.

இதே சிறிசேர் அல்லது பா ம உ சிறிதரன் அவர்களை வவுனியாவில் இருக்கும் அக்கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஆசனம் பெற்றோம். 2010ம் ஆண்டு இவ்வாறு முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றையும் இழந்து வவுனியாவில் இருந்து சிறிதரன் எம்பி தேர்தல் கேட்பதற்காக விரும்பிய போது நாம் ஈபிஆர்எல்எப் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று ஆசனம் கேட்டோம். அழுதோம். சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் தலைமையில் அவர்களிடம் கிளிநொச்சி இளைஞர்களாகிய நாம் அவர்களிடம் கேட்டோம். கிளிநொச்சி மாவட்டத்தில் சிந்தப்பட்ட இரத்தம், இழப்புக்களிற்காக கிளிநொச்சிக்கு ஓர் எம்பி தேவைப்பட்டமைக்காக நாம் செயற்பட்டோம். நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி, அதை ஆதரித்தமைக்கு காரணம் என்ன. நீங்கள், வீடு, ஆடு மாடு வழங்குவதற்காக நாம் உங்களை அனுப்பவில்லை.

எமது தன்மானத்தை பாராளுமன்றிலும், சர்வதேசத்திற்கும் எடுத்துரைக்குமாறு நாம் கூறியிருந்தோம். அதற்காகவே நாம் அவர்களை பாராளுமன்றம் அனுப்பியிருந்தோம். உங்களை இரண்டு கோடி பெற்றுக்கொள்வதற்காக நாம் அனுப்பவில்லை. மிக கேவலமாக வெட்கி தலை குணியும் வகையில் எந்த அரசியல் தலைவர்களும் செய்யாதவாறு லஞ்சம் பெற்றுள்ளார்கள். அதுவும் ரணிலிடம். நமது போராட்டத்தை இரண்டாக பிளந்து இன்று நாம் நடு தெருவில் நிற்க காரணமாகிய சிங்கள நரியிடம் கேவலம் பிச்சை எடுத்துள்ளார்கள் கூட்டமைப்பினர். அதிலும் சிறிதரன் உட்பட.

இந்நிலையில் சிவசக்தி ஆனந்தன் இரண்டு கோடி ரூபா விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும்வரை எவரும் வாய் திறந்திருக்கவில்லை. இவ்விடயம் வெளிவந்து சில நாட்களில் சிறிதரன் சொல்கின்றார் எமக்க அது கிடைக்கவில்லை, அப்படியானால் அதை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மறுநாள் சேனாதிராஜா அவர்கள் நாம் பெற்றுக்கொண்டோம் ஆனால் அவற்றை மக்களின் நலன்சார்ந்து செலவளித்தோம் என்கின்றார். அதற்காக தான் எவற்றை செலவளித்தோம் என சேனாதிராஜா அவர்களும், சாந்தி எம்பி அவர்களும் தாம் செலவு செய்த பட்டியலை வெளியிடுகின்றனர். அதற்பின்னர் சிறிதரன் சொல்கின்றார் நானும் சம்பந்தன் ஐயாவும் அதை பெற்றுக்கொள்ளவிலலை என்கின்றார். அப்படியானால் ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. இது இரகசியமான காசா? லஞ்சமா? அல்லது அரசுக்கு சேவை செய்வதற்கு அரசின் கைக்கூலியாக செயற்பட்டமைக்காக தரப்பட்ட பணமா என்பதை மக்களிற்கு வெளிப்படுத்துங்கள் என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விலைபோய் இன்று இந்த பணத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றார். சரி நீங்கள் பெறப்பட்ட பணம் லஞ்சம் இல்லை என்றால் அது அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட பணம் என்றால் இந்த கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம். பல அழிவுகளை சந்தித்த மாவட்டம். மாற்றுவலுவுள்ளுார், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என வாழும் நிலையில் ஏன் அந்த பணத்தை சிறிதரன் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அதை மக்களிற்கும் எனக்கு வெளிப்படுத்த வேண்டும் என பொன்காந்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 4 =

*