;
Athirady Tamil News

பதினைந்து பேருக்கு காசு கொடு்கப்பட்டபோது ஒருவருக்கு கிடைக்கவி்ல்லை ஏனைய பதின் நான்கு பேரும் கேட்டிருக்க வேண்டுமல்லவா? – சங்கரி கேள்வி..!!

0

பதினைந்து பேருக்கு காசு கொடு்கப்பட்டபோது ஒருவருக்கு கிடைக்கவி்லை ஏனைய பதின் நான்கு பேரும் கேட்டிருக்க வேண்டுமல்லவா? என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற தெர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

சமஸ்டிக்கான எந்தவொரு அடையாளமும் புதிய அரசியலமைப்பில் இல்லை என ஜெயம்பதி விக்ரமநாயக்க தெரிவிக்கின்றார். இவ்வாறு சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரும் இவ்வாறே தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். இன்று பரவலாக பேசப்பட்டுவரும் விடயம் இரண்டு கோடி விவகாரம். ஒருவர் லட்சம் கிடைத்தது என்கின்றார் இன்னொருவர் கிடைக்கவில்லை என்கின்றார். பதினைந்து பேருக்கு காசு கொடு்கப்பட்டபோது ஒருவருக்கு கிடைக்கவி்லை ஏனைய பதின் நான்கு பேரும் கேட்டிருக்க வேண்டுமல்லவா? அது கேட்கப்படவில்லை.

சரி இவர்கள் தவிர்ந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ரணில் என்னத்தை கூறியிருப்பார் என அவர் கேள்வி எழுப்பினார். துக்கியெறியப்பட்ட எலுப்புதுண்டுகளை தூக்கி செல்வதுபோல் உள்ளது என அவர் குறிப்பிட்டார். அவ்வாறு தூக்கி எறியப்பட்டபோது 60 மில்லியன் ரூபாய் சுமந்திரனிற்கு லாபம் கிடைத்தது. காரின்பெறுமதியுடன் அதற்கான வரியும் நீக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் சுமந்திரனிடம் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்றார்.

அதனை லஞ்சமென்று பார்க்காமல் ஒதுக்கீடாக பார்த்தாலும் அது ஞாயமற்ற முறையில் செல்வாக்கை பயன்படுத்துவதாகவே அதை கருதமுடியும் என அவர் குறிப்பிட்டார். சட்டப்படி ரணில் செய்தது தவறு. நம்பிக்கை இல்லா பிரேரனை வந்தால் ரணிலிற்கு எதிராக எல்லாரும் வாக்களிப்பர் என்றார். நான்பெரிது நீ பெரிது என புாராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் தற்போது சம்பந்தனும் தான் பெற்றுக்கொண்டதை ஏற்றுக்கொண்டுள்ளார். தான் வேண்டாம் என்று சொல்லவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு தமது சுய லாபத்திற்காகவும், சுயநலத்துடனும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கா நீங்கள் தொடர்ந்தும் ஆதரவளிக்க போகின்றீர்கள். தமிழ் தெசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிற்கு எதையும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தாம் செயற்படுவதாக கூறிக்கொண்டு தமது தேவைகளையே அவர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இன்று புதிய அரசியலமைப்பில் பல்வேறு தீர்வு திட்டங்கள் காணப்படுவதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுமே இல்லாத தீர்வு திட்டத்திற்கு ஆதரவளிக்கவே இந்த தேர்தலை பயன்படுத்த முயல்கின்றனர்.

இந்த உண்மையை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இன்று நல்ல நோக்கத்துடன் தமிழ் மக்களிற்கு ஒவ்வாத தீர்வு திட்டத்தை முன்வைக்கும் சக்திகளிலிருந்து பிரிந்து புதிய கூட்டாக தமிழ் மக்களின் உரிமைக்காக நாம் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த நல்ல சூழலை உணர்ந்து மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 7 =

*