;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசியதன் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தில் உயர்தர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது…!!

0

????????????????????????????????????
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசியதன் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தில் உயர்தர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது! மாவை சேனாதிராஜா!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசியதன் அடிப்படையில் வரவு செலவு திட்டத்தில் முன்னர் எப்பொழுதும் இல்லாததைவிட உயர்தர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபா மட்டுமல்ல அபிவிருத்திக்கு பல திட்டங்கள் ஊடாக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழரசுகட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

நேற்று வவுனியாவில் உள்ளுராட்சி மன்றதேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தொடர்பான விளக்க உரையின் பின்னே இவ்வாறு ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய வரலாற்றிலேயே இவ்வாறான சந்தேகம் ஒருபோதும் எழுந்தது கிடையாது. வரவு செலவுதிட்டத்தை பலமுறை நாம் ஆதரித்துள்ளோம். பலமுறை நாம் எதிர்த்துள்ளோம். முக்கியமாக அரசாங்கத்திற்கு மக்கள் தந்த ஆணைப்படி எங்களுடைய தேர்தல் அறிக்கையிலே ஒரு பக்கம் அரசியல் தீர்வு காண்பதற்காக முயற்சி எடுக்கப்படல் வேண்டும்.

அடுத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் தேசத்தையும் கட்டியெழுப்பவேண்டும் என்ற தீர்மானத்தின் படி நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதற்காக ஆட்சி மாற்றத்திற்கு பின்பு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அவர்கள் எமது பிரதேசத்திற்கு வந்து நடத்திய கூட்டங்களிலும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அதனைவிட மிக அண்மைக்காலத்தில் நிதி அமைச்சிடம் அவர்களின் அழைப்பின் பெயரில் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றோம். எமது பிரதேசத்தை மீளக்கட்டியயெழுப்புவதற்கு இணைந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு தொடர்பாளராக இணைப்பாளராக முன்னாள் நிதிச்செயலாளர் தற்போது நிதிச்சபைக்கு ஆலோசகராக இருக்கின்ற வாசலிங்கம் மற்றும் சரித்த ரத்வத்த ஆகியோரும் சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்கள.

அதேபோல் வரவு செலவு திட்டத்திற்கு முன்னராக இரண்டு மாதத்திற்கு முன்னர் நாங்கள் பிரதமிரிடம் அதேபோன்ற கட்டமைப்பு கிழக்கு மகாகாணத்திற்கும் தேவைப்பட்டுள்ளது என்று வற்புறுத்தியுள்ளோம். அதன்பேரின் அதற்குகொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த நபர்களின் யார் என்று இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

மொத்தமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் எமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னுமொரு பாராளுமன்ற குழு பாராளுமன்றத்தில் இருக்கிறது. அதாவது இந்த நாட்டின் அரசியல் சட்டப்படி துறைசார் மேற்பார்வை குழு இருக்கிறது. அந்த குழுவில் பல குழுக்கள் இருக்கிறது. அமைச்சுக்களை இணைத்து செயற்படுத்தும் பரிசோதனைக்குழு, மேற்பார்வை அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கும் குழு என உள்ளது.

குறிப்பாக வரவு செலவு திட்டத்தில் முன்னர் எப்பொழுதும் இல்லாததைவிட உயர்தர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கை கட்டியெழுப்புவதற்காக இந்த ஆண்டில் 50,000 வீடுகளை சீமெந்தினால் கட்டப்படுவதற்கு முன்னர் 5இலட்சம் ரூபா செலவில் இந்தியாவினால் கட்டப்படுவதற்கு மன்மோகன் அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடாத்தினோம். இதன்படி மலையக மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பகிரப்பட அதற்கு பாராளுமன்றத்தில் எங்களுடைய வேண்டு கோள் அல்லது வீடமைப்பு அமைச்சுடனும் பாராளுமன்றத்தில் நாங்கள் பேசிய சந்தர்ப்பங்கள் உள்ளது. அரசாங்கத்தின் பிண்ணனியில் 5இலட்சம் ரூபா செலவில் தற்போது அந்த வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதைவிட முக்கியமான ஒன்று எங்களுடை பாராளுமன்ற உறுப்பினர்கள் 65,000 இரும்பு வீடுகளுக்கு ஜனாதிபதியிடமும் குறிப்பாக சுமந்திரன் அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஜனாதிபதி இந்த பிரச்சினையில் தலையீடு செய்திருந்தார். பின்னர் அரசாங்கத்திடம் நாங்கள் விடுத்த வேண்டு கோளின்படி 50,000 வீடுகள் 10இலட்சம் ரூபா செலவில் கட்டிகொடுக்கப்படும்.

அதைவிட 2இலட்சம் ரூபா வாழ்வாதாரதார உதவி பணமும், ஒருஇலட்சம் ரூபா மலசலகூடம் கட்டவும் அரசாங்கம் தீர்மானித்தது. 50,000 வீடுகள் கட்ட அரசாங்கத்திற்கு 750 மில்லியன் நிதி தேவைப்பட்டது. அதற்கான கடனும் பெறப்பட்டது. இது திட்டவட்டமாக எமது வேண்டுகோள். நாங்கள் அந்த 65,000 வீடுகள் வேண்டாம் என்றதன் விளைவுதான் 50000 வீடுகள். 13இலட்சம் ரூபா செலவில் வடக்கு கிழக்கில் மட்டும் கட்டப்படவுள்ளது.

இரண்டாவது போரினால் பாதிக்கப்பட்ட 90,000 குடும்பங்களுக்கு தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெறவுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள் உட்பட மாற்று திறனாளிகளுக்கு மற்றும் பெண்களை தலைமைத்துமாக கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆரம்ப கட்டநிதியாக 2750 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளனர்.

அதைவிட உடல் நலம் குறைந்தவர்கள், பேராளிகள் உட்பட 12,600 பேர் வரவு செலவுதிட்டத்தில் குறிப்பிட்டபடி அவர்களின் எதிர்காலம் அவர்களின் முன்னேற்றம் பற்றியும் வேலைவாய்ப்பு பற்றியும் அவர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமாயின், அரைவாசி சம்பளத்தை அரசாங்கம் கொடுக்கும் என்ற வகையில் அவர்களுக்கு ஒட்டு மொத்தமாக 300மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதை விட 16 திட்டங்கள் எமது முயற்சியினால் இடம்பெற்றுள்ளது என்பதை பகிரங்கமாக சொல்கின்றோம். எங்கள் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்கு நன்றி கூறுகின்றோம். இவ்வாறு கூறியதானால் தான் இவ்வளவு விடயத்தை நாம் கூறுகின்றோம். அப்பொழுது தான் எங்களுடைய மக்களுக்கும் தெரியும். அதையொரு பிரச்சாரமாக நாங்கள் முன்வைக்கவில்லை. நாங்கள் கொள்கையுடன் முயற்சிக்கின்றோம்.

இவ்வாறான பொய்களை பரப்புபவர்கள் குறிப்பாக தம்முடைய பிரதேசத்திற்கு ஒரு அறிக்கையைகூட முன்வைக்காதவர்கள். ஒரு வேண்டுகோளை முன்வைக்காதவர்கள். எங்களுடைய பேச்சுவார்த்தையில் பங்கு பற்ற மறுத்த இவர்கள், எங்களுடைய பிரதிநிதிகள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது அபத்தமானது. எங்களுடைய வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான செயல். மிகவும் கவலையுடன் மிகவும் மோசமாக இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இந்த இரண்டு கோடிரூபா ஒரு பெரும் பிரச்சினையல்ல.

இந்த இரண்டு கோடிரூபாக்காக அரசாங்கத்திடம் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. நாங்கள் பிரதமிரிடமும் ஜனாதிபதியிடமும் பல திட்டங்களை முன்வைத்துள்ளோம். அது பற்றி அந்த அறிக்கை தெளிவாக சொல்கிறது. அவர்கள் அறிவித்த அந்த திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டட செயலகத்திற்கும் உங்களுடைய ஆலோசனையை தாருங்கள் என்று கேட்டதன் அடிப்படையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அறிக்கைகையை சமர்பித்திருந்தார்கள். இந்த கூட்டங்களுக்கு வராதவர்கள் இந்த அறிக்கையை கொடுக்காதவர்கள். அவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதே அவர்களின் இலக்கு.

30 ஆண்டுகாலமாக பாதுகாப்பு வலயமாக இருந்த மயிலிட்டிதுறைமுகத்தை விடுவித்துள்ளோம். இதற்க அரசாங்கம் 150மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யவுள்ளனர். அதைவிட யு.என்.டி.பி நிறுவனத்துடன் வாசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நேர்வே நாட்டின் உதவியுடன் அந்த துறைமுகத்தையும் அங்கு மீள் குடியேற்றத்தையும் செய்ய பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். எழுத்து மூலம் கிடைக்கப்பெற்றதும் நிதி எவ்வளவு என்று அறிவிக்கின்றேன்.

பிரதமர் தலைமையில் குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் இருப்பவர்களின் விபரங்களை அந்த மாவட்ட செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்ட படி அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்பட்ட ஆலோசனை அடிப்படையில் அந்த 2கோடிரூபா. நாங்கள் கொடுத்த திட்டத்திற்கு தான் ஓரு சின்ன விடயம். அதைவிட ஆயிரம் ஆயிரம் கோடிகள் வரவு செலவு திட்டதில் எமது பேச்சு வார்த்தையினால் பல தொழில் துறைகள், பல அபிவிருத்தி திட்டங்கள் குறிப்பாக இந்த போராளிகளுக்கு, பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் அதனை குறிப்பிட்டுள்ளோம்.

இவ்வாறான பொய்களை சொல்பவர்கள் எமது இனத்தின் விடுதலைக்கோ, எமது விடுததலைக்கோ, எமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமில்லாத உதவாத அரசியலில் மிகவும் கபடம் வாய்ந்த உள் நோக்கமான பொய் பிரச்சாரவாதிகள் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 16 =

*