;
Athirady Tamil News

முத்தலாக் மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறும்: ஜனாதிபதி நம்பிக்கை..!!

0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 2018 இருக்கும். பிரதமரின் திட்டங்கள் ஏழைப் பெண்களை சென்றடைந்துள்ளன. இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படும் என நம்புகிறேன். உடனடி முத்தலாக் தடைச் சட்ட மசோதா முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவும்.

விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏழைகள் பெற்று வருகின்றனர். ஏழைகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டியலிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*