;
Athirady Tamil News

கால் புண்ணுக்கு கட்டுப்போட்ட பாகனை மிதித்து கொன்ற யானை..!!

0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி கடம்பலிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 46). இவர் மகாதேவன் என்ற யானையின் பாகன் ஆவார்.

யானையின் காலில் கடந்த 6 மாதத்திற்கு முன்புகாயம் ஏற்பட்டது. இதனால் மாத்தூர் அருகே உள்ள தென்னந்தோப்பில் யானை கட்டி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வாரம் ஒருமுறை டாக்டர் காயத்தை சுத்தம் செய்து மருத்து தடவி கட்டுப்போட்டு வந்தார். மற்ற நாட்களில் கிருஷ்ணகுமார் யானையின் காலில் உள்ள புண்ணை சுத்தம் செய்து கட்டுப்போட்டு வந்தார்.

வழக்கம்போல் நேற்று யானையின் கால் புண்ணுக்கு மருந்து போட கால் அருகே கிருஷ்ணகுமார் அமர்ந்து சிகிச்சை அளித்தார். அப்போது ஆவேசமடைந்த யானை பாகனின் முகத்தில் கால் வைத்து நசுங்கியது. இதில் தலைநசுங்கி பாகன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வனத்துறை மற்றும் யானை பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + thirteen =

*