;
Athirady Tamil News

பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து கருப்பின பெண்ணாக மாறிய மொடல் அழகி..!!

0

ஜேர்மனை சேர்ந்த மார்ட்டினா பிக் என்ற மொடல் அழகி, ஆப்பிரிக்க இனத்தவர் போல தன்னை கருப்பாக மாற்றிக்கொள்வதற்காக ஊசிகள் மூலம் மருந்தினை தனது உடலில் செலுத்தியுள்ளார்.மேலும், பல்வேறு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.

இவர் ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக மட்டும், £50,000 தொகை செலவு செய்கிறார்.

வெள்ளை நிற பெண்மணியாக இருக்கும் இவர், ஒரு ஆப்பிரிக்க பெண்ணாக மாற வேண்டும் என்பதே ஆசை.

அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலேயே பெரிய மார்பகம் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதற்கென்று தனிப்பட்ட முறையில் சிகிச்சை எடுக்கிறார்.

இவர், தனக்கான சிகிச்சைகளை அமெரிக்காவில் எடுத்துக்கொள்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 3 மெலனின் ஊசிகளை உடலில் செலுத்தியதால் தான் இவரது உடல் இன்னும் கருப்பாக மாறியுள்ளது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மார்ட்டினா எழுதியுள்ளதாவது, தற்போது நான் ஒரு ஆப்பிரிக்க பெண். நான் மற்ற கருப்பின பெண்களிடம் இருந்து மாறுபட்டு உள்ளேன்.

இப்படி எனது உடலை மாற்றிக்கொண்டதற்கு காரணம், நான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, எனது இலக்கும் அதுதான், அது விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், தனது இந்த முயற்சிக்கு, தன்னுடைய காதலர் Michael மிகவும் ஆதரவாக இருந்தார். பள்ளிப்பருவத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம்.

அவர் எனக்கு நல்ல ஆலோசகராக இருப்பதோடு மட்டுமின்றி, சிறந்த வாழ்க்கை துணையாகவும் இருக்கிறார் என்று கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − four =

*