;
Athirady Tamil News

சமூக சேவைகளுக்காக அதிகம் செலவிட்டால் நீண்ட நாள் வாழலாம்: கனடிய ஆய்வில் தகவல்..!!

0

சமூக சேவைகளின் மீது அதிகம் கவனம் செலுத்தினால் மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், இளம் வயது மரணங்களைக் குறைக்கவும் முடியும் என கனடிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக செய்யப்படும் சேவைகள், வருமான உதவிகள், முதியோருக்கு செய்யப்படும் உதவிகள் இவையனைத்தும் மொத்த நாட்டு மக்களின் நலனுக்கும் பங்களிக்கின்றன.

ஆரோக்கியத்திற்காக அரசு செலவிட்டு வரும் சிறிய தொகையை சற்று உயர்த்தினால்கூட மொத்த நாட்டின் நலனையும் மேம்படுத்த முடியும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

9 மாகாணங்களின் 30 வருட செலவினங்களை ஆராயும்போது, ஆரோக்கியத்திற்காக எந்த அளவிற்கு செலவிடப்பட்டுள்ளதோ அந்த அளவு ஆயுட்காலம் நீடித்துள்ளதையும் இள வயது மரணங்கள் குறைந்துள்ளதையும் காண முடிந்தது.

ஆரோக்கியம் சார்ந்த சமூக சேவைக்காக செலவு செய்தால்கூட, ஆயுட்காலம் ஐந்து சதவிகிதம் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அது நோய் அறிகுறிகளுக்கு மருத்துவம் பார்ப்பதை விட உடற்பயிற்சிக்கும் உணவுக்கட்டுப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைப் போன்றது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி வறுமை மட்டுமே ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய காரணியாகும். குறைந்த வருமானம் உடையவர்களுக்கு ஆரோக்கியம் குறைவாகவே உள்ளது.

எனவே சமூக சேவைகளுக்காக செலவிடும் தொகையை சற்று உயர்த்தினால், ஆரோக்கியம் பெரிய அளவில் பெருகியதுபோல் தோன்றும், அதாவது ஆரோக்கிய அதிகரிப்பை ஒப்பிடும்போது வருமான வினியோகம் பெரியதாகத் தெரியாது என்று ஆய்வாளர்களில் ஒருவரான Daniel Dutton கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − eight =

*