;
Athirady Tamil News

அவசர உதவி கேட்டு போன் செய்த 6 வயது சிறுவன்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

0

சீனாவில் சொந்த தந்தையிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் எனக் கோரி 6 வயது சிறுவன் பொலிசாருக்கு அவசர அழைப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பை பதிவு செய்துள்ள பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

குறித்த தொலைபேசி அழைப்பில், தமது தந்தை மிக அதிக அளவில் மது அருந்தி உள்ளதாகவும், தற்போது அவர் கொடூரமாக நடந்து கொள்கிறார் எனவும் சிறுவன் அழுகையுடன் தெரிவிக்கின்றான்.

சிறுவனின் தந்தை மது போதையில் குடியிருப்பில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியுள்ளார்.

மேலும் சிறுவன் மற்றும் அவரது தாயாரை மிகவும் மோசமாக துன்புறுத்தவும் செய்துள்ளார்.இதில் தாங்கிக் கொள்ள முடியாத சிறுவன் தமது தாயாரின் மொபைல் போனில் இருந்து அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளான்

அதில் தந்தை எஙகைளை கொடுமைப்படுத்துகிறார் தயவாக வந்து காப்பாற்றுங்கள் என கெஞ்சியுள்ளான்.

இதனையடுத்து சிறுவனின் குடியிருப்புக்கு விரைந்த பொலிசார் சிறுவனை தேடியுள்ளனர். அப்போது சிறுவன் தனது தந்தையிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு போர்வைக்குள் ஒளிந்திருந்துள்ளான்.

அவனது தாயார் சிறுவனை தேற்றும் வகையில் இருந்துள்ளார். பொலிசார் சிறுவனை மீட்டுள்ளதுடன் மது போதையில் இருந்த நபரை தமது மனைவி மற்றும் மகனிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

மட்டுமின்றி, குறித்த பகுதியில் இதுபோன்ற மது போதை கலாட்டக்கள் பெரும்பாலான குடும்பங்கள் அன்றாட நிகவுதான்.

ஆனால் 6 வயது சிறுவன் நெஞ்சை உலுக்கும் வகையில் அழுது பொலிசாரின் உதவியை நாடிய சம்பவம் அரிது, அதனால் இந்த வழக்கை உளவியல் ரீதியாக நாட இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 7 =

*