;
Athirady Tamil News

மது அருந்திய அரைமணி நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பிரபலம்: வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

0

பிரபல மொடல் அழகி ஒருவர் மது அருந்திய அரைமணி நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகியும், தொலைக்காட்சி தொகுப்பாளனியுமான Ferne McCann-வும் நட்சத்திரமான Rebekah Vardy-வும் NTA விருது வழங்கும் விழாவிற்காக தயாராகியுள்ளனர்.

அப்போது இருவரும் Prosecco என்ற மது அருந்தியுள்ளனர். அவர்கள் இருவருக்கு அருகில் இருந்த மேஜையில் 2 Pornstar Martinis மது இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகிய அரை மணி நேரத்தில் Ferne McCann தன் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அது தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் மது அருந்தி குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு பின்னர்தான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், இல்லையேல் அந்த மது அப்படியே தாய் பால் வழியாக குழந்தைக்கு செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் இது ஒரு மோசமான செயல் என்று கூறி வருகின்றனர். மேலும் Ferne McCann -வுக்கு கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் திகதி குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 6 =

*