;
Athirady Tamil News

49 பெண்களை கொன்று உடலை பன்றிக்கு உணவாக போட்ட நபர்: பதறவைக்கும் சம்பவம்..!!

0

கனடாவை சேர்ந்த நபர் 49 பெண்களை கொடூரமாக கொன்று அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாக போட்டுள்ளதோடு, பொலிசாருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதிகளவில் கொலை செய்தவர்கள் குறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.ராபர்ட் பிக்டோன் (68) என்ற நபருக்கு வான்கூவரில் பன்றி பண்ணை சொந்தமாக உள்ளது. அங்கு அமைதியான வாழ்க்கை வாழ்ந்த அவரின் கருப்பு பக்கம் மிக பயங்கரமாக உள்ளது.பா

லியல் தொழிலாளர்கள், போதை மருந்து விற்பவர்கள் மூலம் பெண்களை தனது பண்ணைக்கு ராபர்ட் அழைத்து வருவார்.

அவர்களுக்கு பணம், மது போன்றவற்றை கொடுப்பதாக ஆசைகாட்டி பெண்களை கொடுமைப்படுத்தி ராபர்ட் கொலை செய்வார்.

இப்படி 49 பெண்களை அவர் கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் சடலத்தை பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு உணவாகவும், அந்த மனித மாமிசத்தை பொலிசாருக்கு விற்றும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2002-ல் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்பதாக ராபர்ட் மீது புகார் கூறப்பட்ட நிலையில் அங்கு அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.

அங்கு கொலை செய்யப்பட்ட பெண்களின் பொருட்களும், உடல் பாகங்களும் கிடைத்துள்ளன. இதோடு இரண்டு பெண்களை கொலை செய்து அவர்களின் தலை, கை, கால்களை குளிரூட்டும் பெட்டியில் ராபர்ட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + seventeen =

*