;
Athirady Tamil News

திருமலையில் விபத்து அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் வைத்தியசாலையில்…!!

0

திருகோணமலை உட்துறைமுக வீதியால் மோட்டார் பயணித்த நாட்டு பிரஜைகள் இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் இன்று (29) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் அவுஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய பல்கலைகழக யுவதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவிலிருந்து கல்வி தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக திருகோணமலை வந்த அவுஸ்திரேலிய யுவதிகள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தன்னுடைய தொலைபேசியில் செல்பி எடுத்த வேளை முன்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை உட்துறைமுக வீதியிலேயே இவ்விபத்து இடம் பெற்றதுடன் துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*