;
Athirady Tamil News

உலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிவு..!!

0

டாவோசில் நடைபெற்றுவரும் உலகப் பொருளாதார மாநாட்டிற்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களும் பொருளாதார வல்லுனர்களும் தாங்கள் உலகின் தலைசிறந்த நாட்டில் கால் வைத்திருப்பதாகப் பெருமைபட்டுக்கொள்ளலாம்.

அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றும் Wharton School போன்ற சில அமைப்புகளும் சேர்ந்து ஆண்டுதோறும் நடத்திவரும் ஆய்வு ஒன்றில் உலகின் தலைசிறந்த நாடாக சுவிற்சர்லாந்து தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப்பெருமையை அடைந்துள்ளது. இரண்டாவது இடத்தை கனடாவும் மூன்றாவது இடத்தை ஜேர்மனியும் பெற்றுள்ளன.

பிரித்தானியாவும் ஜப்பானும் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளன.

நிலையான, செழிப்பான, தொழில் செய்வதற்கு ஏற்ற பொருளாதாரம் உடைய நாடு என சுவிற்சர்லாந்து பெற்றிருக்கும் நற்பெயரும் அதன் வெற்றிக்கு ஒரு காரணமாகும்.

ஒரு நிறுவனத்தின் தலைமையகமாக செயல்படுவதற்கு ஏற்ற நாடு என்ற பெயரையும், ஓய்வு கால வாழ்வைக் கழிக்க உகந்த மூன்று நாடுகளில் ஒன்று என்ற பெயரையும் அது பெற்றுள்ளது.தனது குடிமக்களை நன்கு கவனித்துக்கொள்ளும் சிறந்த நாடுகளில் ஒன்று என்ற பெயரையும் அது பெற்றுள்ளது.

குடியுரிமை துணைத்தரவரிசையில் அது இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.இந்த பெயரைப் பெறுவதற்கு ஒரு நாட்டில் நிலவும் மனித உரிமைகள், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், மத சுதந்திரம், சொத்துரிமைகள் மற்றும் சீராக விநியோகிக்கப்படும் அரசியல் ஆற்றல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.

ஆனால், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது சுவிற்சர்லாந்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய வேறுபாடு அதிகம்.

ஐரோப்பிய யூனியன் சுவிற்சர்லாந்தில் மனித உரிமைகள் நலன் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தது.

மூன்றாம் தலைமுறை வெளி நாட்டவர்கள் குடியுரிமை பெறும் நடைமுறைகளை இப்போதுதான்அது சற்று எளிதாக்கியுள்ளது.

அங்கு முகத்தை முழுவதும் மறைக்கும் பர்தா அணிவதற்கெதிரான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இத்தனை எதிர்மறை நிகழ்வுகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்து சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் நிர்வாகக் குளறுபடிகளால் அமெரிக்கா ஏழாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + ten =

*