;
Athirady Tamil News

வவுனியா நொச்­சி­மோட்டையை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை…!!

0

வவு­னியா – நொச்­சி­மோட்டை பாலம் முழு­மை­யாக சீர­மைக்­கப்­ப­டும் ­வரை பய­ணி­க­ளும், வாக­னச் சார­தி­க­ளும் அவ­தா­னத்­து­டன் பயணிக்குமாறு பொலி­ஸா­ரால் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

மேற்­படி பாலம் உரி­ய­வ­கை­யில் சீராக்­கப்­ப­டா­மை­யி­னால் எந்­நே­ரமும் விபத்து நேரி­டும் அபா­ய­முள்­ளது. இப்­பா­லம் அடிக்­கடி சேதம­டை­கி­றது. இது­கு­றித்து பொது­மக்­கள் முறை­யி­டும் போது குறித்த பாலத்­தின் சேத­ம­டை­யும் துண்­டம் பாலத்­தின் இன்­னொரு பகு­திக்கு மாற்­றிப் பொருத்தப்படுகிறது.

இத­னால் பாதிக்­கப்­ப­டு­வதும், அச்­சப்­ப­டு­வ­தும் பய­ணி­க­ளும், சார­தி­க­ளுமே. பாலத்தை முழு­மை­யாக சீர­மைக்­கா­மல் அவ­ச­ரத்­துக்கு சேதமடைந்த துண்டத்தை மாற்­று­வ­தையே அதி­கா­ரி­கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இத­னால் எந்­நே­ர­மும் பய­ணி­க­ளும், சார­தி­க­ளும் ஆபத்தை சந்­திக்க நேரி­ட­லாம்.

குறித்த துண்­டத்­துக்கு அரு­கி­னா­லேயே வாக­னங்­கள் செல்­ல ­வேண்­டும். அவ­தா­ன­மாக பய­ணிக்­கு­மாறு காவல் கட­மை­யில் உள்ள பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­வேளை முழு­மை­யாக பாலத்தை சீர­மைக்­கு­மாறு பய­ணி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*