;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்..!! (படங்கள்)

0

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மன்னார் மாவட்டத்தின் கடந்த வருட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு, நிறைவடையாத வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வது குறித்தும் ஆராயப்பட்டது. அமேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகியோர் நிரந்தரமாக இல்லாத நிலை காணப்படுகின்றமை குறித்தும், நிரந்தரமாக அவர்களை நியமிப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் நீர்ப்பாசனம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி, உள்ளிட்ட துறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வின் ஏற்பாட்டில், இணைத்தலைவர்கலான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் றிஸாட் பதியுதீன் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*