வவுனியாவில் வைத்தியர்கள் 24 மணிநேரப் பணிபகிஸ்கரிப்பு! நோயாளர் அவதி..!! (படங்கள்)

சைட்டம் உள்ளிட்ட வைத்தியர்களின் தகுதிவாரியான கொடுப்பனவுகள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (30.01.2018) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னேடுக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று (30.01.2018) காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் நோயாளிகள் வார்ட் அனுமதிகள் இயக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய அசேகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….