;
Athirady Tamil News

இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய மோசடி சிக்கியது..!!

0

பாவனைக்கு உதவாதசொலிக்கினம் (களு தெல்) எண்ணெய்யை எரிபொருள் பவுஸர்களுக்கு கலக்கும் பாரிய மோசடியொன்று தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.அதனுடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கை கனிய வளக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுஸர்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் போது அவற்றில் ஒரு தொகை எரிபொருளை அகற்றி அதற்கு பதிலாக பாவனைக்கு உதவாத எண்ணெய்யை கலப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு அதிகமாக இவர்கள் முல்லேரியாவ பிரதேசத்தில் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 19 =

*