;
Athirady Tamil News

கன்றுக்குட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் லாரியை பின் தொடர்ந்து சென்ற பசு: வீடியோ..!!

0

கர்நாடகா மாநிலம் ஹாவேரி பகுதியில் ஒரு கன்றுக்குட்டிக்கு அடிப்பட்டிருந்தது. காயம் மிகவும் தீவிரமாகி கன்றுக்குட்டி நடக்க முடியாமல் போனது. இதனால் கன்றுக்குட்டியின் உரிமையாளர் அதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி கன்றுக்குட்டியை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கன்றுக்குட்டி சிகிச்சைக்காக அழைத்து செல்வதை அறியதாத பசு லாரியை பின் தொடர்ந்து சென்றது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்றது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பசுவின் தாய்ப்பாசம் அனைவரையும் கண் கலங்க வைக்கிறது. இப்போது கன்றுக்குட்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + seven =

*