;
Athirady Tamil News

தாய் குரங்கு இறந்ததால் பரிதவித்த குட்டி குரங்குகள்..!!

0

திருவள்ளூர், சி.வி.நாயுடு சாலையில் உள்ள மின் கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு தரையில் விழுந்து உயிரிழந்தது. இதனை அறியாத குட்டி குரங்குகள், அசைவற்று கிடந்த தாய் குரங்கை எழுப்ப வந்தன. அதன் கைகள், வாயை பிடித்து இழுப்பது, அதன் மீது தலை வைத்தும் படுத்தும் எழுப்ப முயன்றன.

சிறிது நேரத்துக்கு பின்னர் தாய் குரங்கு இறந்து விட்டதை குட்டி குரங்குகள் உணர்ந்தன. அவை தாய் குரங்கின் உடலை சுற்றி சுற்றி வந்து கத்தின. மேலும் பொது மக்களையும் அருகில் வரவிடாமல் விரட்டின.

இந்த பாசப்போராட்டத்தை கண்ட பொது மக்கள் கண் கலங்கினர். நீண்ட நேரத்துக் பின்னர் குட்டி குரங்குகள் அங்கிருந்து சென்றன.

நகராட்சி ஊழியர்கள் குட்டி குரங்குகள் செல்லும் வரை காத்திருந்து உயிரிழந்த தாய் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*