;
Athirady Tamil News

ஜேர்மனியின் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் இதுதான்..!!

0

பெர்லினை விடவும் Hamburg நகரம் போக்குவரத்து நெரிசல் அதிகமான நகரம் என கண்டறியப்பட்டுள்ளது.German Automotive Club (ADAC) செவ்வாயன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு

Hamburgஇல் போக்குவரத்து நெரிசல் 31,630 கிலோமீட்டர் தூரத்திற்கு நீடித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.Autobahn நெடுஞ்சாலையில் 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்களின் நீளத்தைக் கணக்கிட்டு Hamburgஇற்கு ADAC கொடுத்த குறியீட்டு எண் 390 ஆகும்.

பெர்லினுக்கு கொடுக்கப்பட்ட எண் 388, அதாவது பெர்லினை விட Hamburgஇல் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

நகரத்தின் வட பகுதியில் கட்டுமான வேலை நடைபெறும் இடங்கள் அதிகம் காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று Die Welt பத்திரிகை தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி ஜேர்மானிய வரலாற்றிலேயே கடந்த ஆண்டில்தான் மிக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக ADAC வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள Statista chartஇன்படி 2017ஆம் ஆண்டு ஜேர்மனியில் 723,000 போக்குவரத்து நெரிசல்கள் பதிவாகியுள்ளன. 2016இல் இது 694,000ஆக இருந்தது.

இதற்கு சாலைகளில் கட்டுமானப் பணிகள் நடப்பதும், வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளதும் மட்டுமின்றி போக்குவரத்தைப் பதிவு செய்வது பெருகியுள்ளதும் காரணமாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − two =

*