உலகிலேயே குண்டான பையன் ஆர்யா: இப்போது எப்படியிருக்கான் தெரியுமா?..!!

உலகிலேயே மிக குண்டான சிறுவனாக அறியப்பட்ட ஆர்யா, தற்போது பாதியளவில் எடையை குறைத்துள்ளார்.
இந்தோனேஷியாவை சேர்ந்த தம்பதி Rokayah Somantri,Ade Somantri-ன் மகன் ஆர்யா.பிறக்கும்போது நார்மலான உடல் எடையில் பிறந்தாலும், வளர வளர பசியின் காரணமாக அதிகளவு உணவுகளை எடுத்துக் கொள்ள தொடங்கினான.
இதன் காரணமாக இவனது எடை பத்து வயதிலேயே 190 கிலோ எடையில் காணப்பட்டான்.
எங்கும் நகர முடியாமல் படுக்கையறையிலேயே இருந்தான், இதனால் கவலையடைந்த ஆர்யாவின் பெற்றோர் மருத்துவரின் ஆலோசனையை நாடினர்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் Bariatric Surgery மேற்கொண்டதால் மூன்று வாரங்களில் 19 கிலோ எடையை குறைக்க முடிந்தது.
தொடர்ந்தும் ஆர்யா மிக கடுமையான டயட்டை பின்பற்றி வந்ததால், தற்போது 114 கிலோ எடையுடன் இருக்கிறான்.
தினமும் 2 கிலோமீற்றர் நடைப்பயிற்சி செய்யும் ஆர்யா, ப்ரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கூறும் அவனது தாய், படிப்பிலும் படுசுட்டியாக விளங்கும் ஆர்யாவை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்