;
Athirady Tamil News

திருமண விளம்பரங்கள் ஊடாக தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்டு வந்தவர் சிக்கினார்..!!

0

பத்திரிகைகளில் வௌியாகின்ற திருமண விளம்பரங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பாதுக்கை, மீப்பே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

பெண்களை ஏமாற்றி தங்க ஆபரணங்களை பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தவிர தங்க மாலைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டுக்கள் பலவற்றுடன் இந்த சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

குறித்த சந்தேகநபர் கிதுலம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என்பதுடன், அவர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*