;
Athirady Tamil News

பூந்தோட்ட முகாமில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை…!!

0

16வயதிற்கு குறைந்த பெண்பிள்ளையை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 30வயதான ஈஸ்வரிபுரம் பகுதியை சேர்ந்த நபருக்கு நேற்றைய தினம் (29ம் திகதி 01ம் மாதம் 2018ம் ஆண்டு) 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பழித்துள்ளது.

2005ம் ஆண்டில் வவுனியா பூந்தோட்டம் முகாமில் நபர் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்தள்ளார் இதனை அரசசார்பற்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கண்டு அந்த பிள்ளையிடம் விசாரணை மேற்கொண்டு தாயாரிடம் பிள்ளையை ஒப்படைத்துள்ளார்.

இதனை அடுத்து தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து பிள்ளையினுடைய வாக்கு மூலத்தை பதிவு செய்து. துஸ்பிரயோகத்தை மேற்கொண்ட நபரை கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தரியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு 10ம் மாதம் 24ம் திகதி அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் சாட்சிகள் நெறிப்படுத்தாப்பட்டு 29ம் திகதி 01ம் மாதம் 2018ம் ஆண்டு தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் எதிரி குற்றவாழியாக கண்டுகொள்ளப்பட்டு எதிரிக்கு எதிராக முதலாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 1000 ரூபா அபராதமும் அதை செலுத்த தவறின் 01மாத சாதாரண சிறைத்தண்டனையும் 02ம் மற்றும் 03ம் குற்றச்சாட்டுகளுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 1000 ரூபா அபராதமும் அதை செலுத்த தவறின் 01 மாத சாதாரண சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 200,000 ரூபா நஸ்ட ஈடும் அதை செலுத்த தவறின் 01 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − four =

*