;
Athirady Tamil News

மத்தியப்பிரதேசம்: 1-ம் வகுப்பு மாணவன் மீது சூடான குழம்பு ஊற்றிய பெண் ஊழியர்..!!

0

மத்தியப்பிரதேசம் மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு மாணவன் பிரின்ஸ் மேக்ரா கடந்த வாரம் பள்ளியில் மதிய உணவு வாங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவன் இரண்டு தடவை குழம்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் ஊழியர் சிறுவன் மீது சூடான குழம்பை ஊற்றினார்.

இதில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவன் கழுத்து, முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் மீது ஊற்றிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பாட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் பெண் ஊழியர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தெரியாமல் நடந்த விபத்து என கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மீது சூடான் குழம்பு ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − sixteen =

*