;
Athirady Tamil News

திருச்சி காவலர் குடியிருப்பில் பூட்டிய வீட்டிற்கு அழுகிய நிலையில் ஏட்டு பிணம்..!!

0

திருச்சி கே.கே.நகரில் மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இ1 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்து போலீஸ்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் விரைந்து சென்று பூட்டிய வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அந்த வீட்டில் குடியிருந்த தங்கபாக்கியம் (வயது 34) என்ற போலீஸ் காரர் அழுகிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்தார். அருகில் மதுப்பாட்டில்களும் கிடந்தன. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தங்கபாக்கியம் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்தினர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கீழையூர் தாலுக்கா ஒக்கநாடு கிராமத்தைச் சேர்ந்த தங்க பாக்கியம் கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி மாநகர ஆயு தப்படை போலீசில் சேர்ந்துள்ளர்.

ஆயுதப்படை போலீசில் போக்குவரத்து பிரிவு டிரைவராக பணியாற்றி வந்தார். 34 வயதானவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. போலீஸ் குடியிருப்பில் அவரது தந்தை தனபாலுடன் குடியிருந்து வந்தார்.

அதிக குடிபழக்கம் உடைய தனபாக்கியம் குடித்து விட்டு சரியாக பணிக்கு செல்வதில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை.

இதனால் போலீஸ் பதிவேட்டில் டெசர்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்தார். இந்த நிலையில் தான் தங்க பாக்கியம் பிணமாக கிடந்துள்ளார். அவர் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரது சாவில் வேறு காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − two =

*