;
Athirady Tamil News

நாளையும் நாளை மறுதினமும் தபால் மூல வாக்களிப்புக்கு அவகாசம்..!!

0

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது நூற்றுக்கு 82 வீதத்திற்கும் அதிமான அளவு நிறைவடைந்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.

சுதந்திர தினமான பெப்ரவரி 04ம் திகதியும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறும் என்று அவர் கூறினார்.

உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலதிகமாக இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி நாளை வியாழன் (01) மற்றும் நளைமறுதினம் வெள்ளிக்கிழமை (02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.

தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

அத்துடன் தபால் மூல வாக்களிப்பை இதுவரை மேற்கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளைய தினம் அவர்களின் அலுவலகங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்றும், அந்த சந்தர்ப்பம் தவறினால் நாளை மறுதினம் தமது மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + seventeen =

*