;
Athirady Tamil News

பீகாரில் 50 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்..!!

0

இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின்போது ஆங்காங்கே போதைப்பொருட்கள் சிக்குகின்றன.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கட்டிஹார் மாவட்டத்தில் சிலர் போதைப் பொருளை டிரக்கில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அம்மாவட்டத்திற்குட்பட்ட ஹஜிபூர் கிராமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிரக்கை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த டிரக் டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, போதைப்பொருளையும், அவர்கள் வைத்திருந்த 36 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த போலீசார் இந்த கடத்தல் தொடர்பாக ஏழு பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு 700 கிலோ இருக்கும் எனவும் அதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 9 =

*