;
Athirady Tamil News

நவூரு தீவு விடுதலை பெற்ற நாள்: 31-1-1968..!!

0

நவூரு பொதுவாக இனிமையான தீவு எனஅழைக்கப்படுவதுண்டு. தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிக அண்மையிலுள்ள தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். நவூரு உலகின் மிகச்சிறிய குடியரசு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ². இந்நாட்டிற்கு அதிகாரபூர்வத் தலைநகர் எதுவும் இல்லை.

இதன் நாடாளுமன்றம் யாரென் நகரில் உள்ளது. இதன் மக்கள்தொகை 9,378 பேர், இது வத்திக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும். “நவூரு” என்ற சொல் நவூருவ மொழியில் அனாஓரோ, “நான் கடற்கரைக்குப் போகிறேன்” எனப் பொருள். மரபுவழியாக நவூருவில் வாழ்ந்த 12 இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த அந்நாட்டின் கொடியில் 12 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மைக்குரோனேசிய மற்றும் பொலினேசிய மக்கள் வசிக்கும் நவூரு தீவு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் செருமன் பேரரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் ஒரு குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போருக்குப் பின், ஆத்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் கூட்டு நிருவாகத்தின் கீழ் உலக நாடுகளின் அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நவூரு சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டது. போர் முடிவடைந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் ஐநா பொறுப்பாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் நவூரு விடுதலை அடைந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + eighteen =

*