;
Athirady Tamil News

தந்தையிடம் மகன் வைத்த நெகிழ்ச்சியான கோரிக்கை..!! (வீடியோ)

0

சட்டப்படி மகனாக தன்னை தத்து எடுத்து ஏற்றுகொள்ளுமாறு மகன் ஒருவர், தத்தெடுக்கும் சட்ட ஆவணங்களை வளர்ப்பு தந்தையிடம் சமர்பித்து கோரிக்கைவைத்த விதம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Logan Borden என்பவர், Rick Morse என்ற இஞைரை சிறு வயதில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

திடீரென ஒரு நாள் தனது வளர்ப்பு தந்தையிடம் சில பேப்பர்களை கொடுத்து கவனமாக படிக்கசொல்லி கேட்டார். Logan Borden சாதாரணமாக படிக்க தொடங்கினார், ஆனால் அதன் அர்த்தம் புரிந்த பின்பு, வளர்ப்பு தந்தையும் வளர்ப்பு மகனும் வெளிப்படுத்திய அன்பு பாசப்பிணைப்பாக இருந்தது.

இது பற்றி பேசிய Rick Morse ”ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த என் தந்தை அதன் பின் அன்று இரவு முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார்” என்றார்.

“சிறுவயது முதலே தன்னை தன் வளர்ப்பு தந்தைதான் வளர்த்து வருவதாகவும், தன்னுடைய அனைத்து சுக துக்க நிகழ்விலும் தனது வளர்ப்பு தந்தைக்கு முக்கிய பங்கு இருப்பதாக குறிப்பிட்டார்.

“எனது உண்மையான தந்தையை பற்றி நினைவுகூறும் வகையில் எதும் என்னிடம் இல்லை, ஆரம்பம் தொட்டே என்னை சிறப்பாக கவனித்து வந்த மாதிரி இப்பொது என் பிள்ளைகளுக்கும் சிறந்த தாத்தாவாக திகழ்கிறார்.

அது மட்டுமின்றி என் மகனும் என் தந்தையை மிகவும் நேசிக்கிறான், எனவே அவரை சட்டபூர்வமாக எனது தந்தையாக்க எண்ணி அவரிடம் தத்தெடுக்கும் ஆவணங்களை அவர் எதிர்பாராத நேரத்தில் கொடுத்தேன், அதை படிக்கும் போது அவர் உணர்ந்த மகிழ்ச்சியை தானும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 8 =

*