;
Athirady Tamil News

முதலாளியின் கழுத்தை இறுக்கி கொண்ட மலைப்பாம்பு..!!

0

இங்கிலாந்தில் நபர் ஒருவர் தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த 8 அடி கொண்ட மலைப்பாம்பால் கடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Hampshire நகரில் வசித்து வந்த Dan Brandon (31) என்பவருக்கு, பாம்புகள் வளர்ப்பது என்றால் கொள்ளை பிரியம். இவர், 10 மலைபாம்பு வகைகளையும், 12 சிலந்தி வகைகளையும் செல்லபிராணிகளாக தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று வீட்டில் அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.பிராண்டன் வளர்க்கும் “டினி” என்ற செல்ல பெயர் சூட்டப்பட்ட மலைபாம்பு அவரது உடலை இருக்கமாக சுற்றி இருக்கலாம், அதனால் பிராண்டன் மூச்சுதிணரல் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என யூகிக்க முடிந்தாலும், இன்று வரை அவரது மரணம் தொடர்பான மர்மம் விலகவில்லை.

தனது கணவரின் இறப்பு குறித்து மனைவி கூறியதாவது, எனது கணவர் அதிக செல்லப்பிராணிகளை வளர்த்து வந்தார். அதில், குறிப்பாக ராக் வகை மலைபாம்பான டினியுடன் தான் அதிகம் விளையாடுவார்.

ஆனால், இறப்பதற்கு சில மாதங்களாகவே டினிடை விட்டு விலகியே இருந்தார். காரணம், அதிக வலுவுடன் பாம்பு வளர்ந்துவிட்டதாகவும், கணிக்கமுடியாதவாறு திகழ்வதாலும் அதன் வலிமையை சமாளிக்கமுடியாமல் தவிர்ப்பதாகவும் எனது கணவர் என்னிடம் கூறினார்.

பிராண்டன் இறந்த அன்று அவரது இடது கண்ணில் ரத்தகசிவு இருந்ததாகவும், நுரையீரல் பாதிக்கப்பட்டு ரத்தநாளங்கள் வெடித்தும் இருந்தது. இதுவே அவரது மரணத்தை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − three =

*