;
Athirady Tamil News

15 மாதங்களாக பாலியல் அடிமை: சிறுமி அனுபவித்த வேதனைகள்..!!

0

அமெரிக்காவில் 15 மாதங்களாக 14 வயது சிறுமியை பாலியல் அடிமையாக வைத்திருந்த தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் Missouri மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. லேரி டய்க்ஸ் (42) மற்றும் அவரின் மனைவி அலிசியா டய்க்ஸ் (42) ஆகிய இருவரும் சேர்ந்து 14 வயதான சிறுமி ஒருவரை கடந்த 2016 அக்டோபரிலிருந்து தங்களது வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.

இருவரும் சேர்ந்து சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்டதுடன், லேரி பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

தொடர்ந்து பாலியல் அடிமையாக சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது தோழியை எப்படியோ தொடர்பு கொண்ட சிறுமி தனது நிலையை விளக்கி கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தோழி எல்லாவற்றையும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சிறுமியை மீட்டதுடன் லேரி மற்றும் அலிசியாவை கைது செய்தார்கள்.

இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெயிலில் வெளியில் செல்ல $500,000 கட்டணம் இருவருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*