நீர்வேலியில் தோரண வாயில் திறப்பு விழா…!! (படங்கள்)

நீர்வேலி கந்தசுவாமி கோவிலைக் குறிக்கும் வகையில் பருத்தித்துறை பிரதான வீதியில் இருந்து நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்குத் திரும்பும் முகப்பில் அமைக்கப்பட்ட தோரண வாயிலின் திறப்பு விழா
இன்று தைப்பூச நாளில் ( 31) காலை 8.00 மணியளவில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.நடராசா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கலாநிதி ஆறுதிருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வாயிலைத் திறந்து வைத்தார்
வளைவு அமைப்பதற்கான உபசரணையினை நீர்வேலி தெற்கு நாகலிங்கம் சண்முகநாதன் குடும்பத்தினர் ஏற்றிருந்தனர்.
கடந்த ஆண்டு வைகாசி விசாகத்து அன்று வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்று இன்று தை மாதம் தைப்பூச தினத்தன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இராசேந்திர சுவாமிநாதன் குருக்கள், சிவஸ்ரீ ப.சிவானந்தக் குருக்கள், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…