;
Athirady Tamil News

றேடியோ தமிழா எப்எம் இணைய வானொலி யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்…!! (படங்கள்)

0

றேடியோ தமிழா எப்எம் என்ற இருபத்து நான்கு மணி நேர இணைய வானொலிச் சேவை யாழ்ப்பாணம் நல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட கலையகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக தனது ஒலிபரப்பை இன்று தைப்பூசத் திருநாளில் 31.01.2018 ஆரம்பித்தது.

சுவிஸ்லாந்தைத் தளமாகக் கொண்டு இணையத்தின் ஊடாக ஒலிபரப்பப்படும் இவ்வானொலிச் சேவை இலங்கையில் நல்லூரில் தனது பணியகத்தைத் திறந்து அங்கிருந்து ஒலிபரப்பைத் தொடக்கியுள்ளது.

வானொலிச் சேவையின் ஆரம்ப நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் பிரதம விருந்தினராகக் கலந்து அலுவலகத்தைத் திறந்து வைத்ததுடன் வானொலி ஒலிபரப்பையும் ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையின் மிகமுன்னணி ஊடகத்தில் ஒலிபரப்பாளர்களாகப் பணியாற்றிய மோகன் இவ்வானொலியின் இயக்குநராகவும் சுரேன் நிர்வாகப் பணிப்பாளராகவும் செயற்படுகின்றனர்.

நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், – இணையப் பாவனை இன்று பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றொயிட் தொலைபேசியின் வாயிலாக இணைய வானொலியைக் கேட்பதற்கு வசதி ஏற்பட்டமை எமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமியில் இருந்து தமிழை ஆள்வதற்கு றேடியோ தமிழா எப்எம் இன்று இணைய வழியில் இணைகின்றது. உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை இணைக்க வல்ல வாய்ப்பைக் கொண்ட இந்த வானொலிச் சேவை தமிழின் பெருமைகளை தமிழின் வரலாற்றம்சங்களை வாழ்வியலை தமிழர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். தமிழ் உணர்வின் குரலாக ஒலிக்க வேண்டும். என்று வேண்டிக்கொள்வதாக குறிப்பிட்டார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*