;
Athirady Tamil News

அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! கைத்தொழில் அமைச்சர்…!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியா குருமன்காட்டில் கலைமகள் விழையாட்டு மைதானத்தில் இன்று (31) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன்

கடந்த தேர்தலிலே பிழையான பாதையிலே வாக்களித்து நாங்கள் உருவாக்கிய பிரதேசபைகள் நகரசபைகளை என்ன செய்தார்கள் என்ன அபிவிருத்தி நடந்தது என்று எங்களுக்கு தெரியும். கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள்; மத்திய அரசினூடாக நாங்கள் கொடுத்த நிதியை செலவு செய்தார்கள் ஒழிய அவர்களிடம் அபிவிருத்தி தொடர்பான எந்த திட்டங்களும் இருக்கவில்லை. அதன் தாக்கத்தை இன்று உணர்கின்றோம்.

எமது மக்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இருக்கின்றது. சில கிராமங்களில் பாதைகள் அமைக்கப்படவில்லை மக்களின் கஸ்ரங்களை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம். வேறு கட்சிகளிலிருந்து எதையும் செய்யமுடியாது என உணர்ந்தவர்கள் இன்று எமது கட்சியில் இணைந்துள்ளனர்.

இவர்களின் நோக்கம் மக்களுக்கு பணியாற்றி தீர்வைத்தர வேண்டும் என்பதுதான் எனவே மக்களே சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள் பல கட்சிகளிலிருந்து வருவார்கள் பல பாசாங்குகளை செய்து வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கேட்பார்கள் அவர்களால் உங்களுக்கும், உங்கள் ஊருக்கும் எந்த அபிவிருத்திகளையும் செய்ய முடியாது என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நல்லாட்சியை பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியினுடாக கொண்டு வந்த நாம் எமது மக்களின் கல்வியையும், பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தை தவற விட்டால் இன்னும் நான்கு வருடங்களுக்கு கஸ்ரப்பட வேண்டியவர்களாக கையேந்த வேண்டியவர்களாக நாங்கள் மாறி விடுவோம். எமது வேட்பாளர்கள் கல்வியாளர்கள் அரசியல் நாகரீகம் உள்ளவர்கள். நமது பிரதேசத்தின் அபிவிருத்தியை பெறுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முப்பது வருடங்களாக யுத்தத்தின் பின் சமாதானம் சமாதானத்தின் பின் அதைத்தருவோம் இதைத்தருவோம் என சொல்பவர்கள் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். யார் மக்களுக்கு சேவை செய்கிறார்களோ அல்லது அபிவிருத்தியை மேற்கொள்வார்களோ அவர்களை தெரிவு செய்யுங்கள், இத்தருணத்தை பிழையாக பாவித்து விடாதீர்கள் உள்ளுராட்சி மன்றத்தினூடாக ஊரிலே உள்ள பாடசாலையை, வைத்தியசாலையை, வீடுகளை வழங்குகின்ற இந்த ஆட்சியை! ஆட்சி செய்ய தெரியாதவர்களிடம் ஒப்படைத்தீர்கள் ஒப்படைத்ததன் பலாபலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள் உள்ளுர் பாதைகளில் பயணிக்க முடியவில்லை

அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை மத்திய அமைச்சர் அழைத்தால் வரமாட்டார்கள் திட்டத்தை தீட்டுங்கள் என்றால் தீட்டமாட்டார்கள் செய்யச்சொன்னால் செய்ய மாட்டார்கள் செய்வதற்க ஒத்துழைக்க மாட்டார்கள் எனவே நாங்கள் உருவாக்கிய பிரதமர் இருக்கிறார் நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் இருக்கிறார்கள், அதனால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நமது எதிர்காலத்தை நமது தலைவிதியை நமது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்தத் தேர்தலிலே யானைச் சின்னத்திற்கு வாக்களித்து ஒற்றுமையை காட்டுங்கள் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*