;
Athirady Tamil News

2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக் காட்டுவோம்..!!

0

????????????????????????????????????
2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக் காட்டுவோம்: வவுனியாவில் பிரதமர்

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னால் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எனத் தெரிவிப்பு

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கட்சிகளும், பொது அமைப்புக்களும் எம்மோடு ஒன்றித்து பயணித்தார்கள். அன்று சொன்னதன் படியாக நான் பிரதமாராக பதவியேற்று என்னுடைய தலைமையில் எமது கட்சியைச் சேர்நத அதிகளவிலான அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்கினோம். சிறுபான்மை ஆட்சியாளாக இருந்த நாங்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தோம். நகரசபை மற்றும் பிரதேச சபை என்பவற்றில் பெண்களின் பிரதிநிதிதுவம் 35 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற ஒரு யோசனையை முன்வைத்தோம். இன்று நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது அதிகளவிலான பெண்கள் அரசியலுக்குள் வந்துள்ளார்கள். பெண்களின் பிரதிநித்துவம் ஆகக்குறைந்தது 25 வீதமாக இருக்க வேண்டும். ஆண்களின் பிரதிநித்துவம் 75 சதவீதத்திற்கு அதிகமாக ஒரு போதும் இருக்காது. அந்த நிலையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

தேசிய அரசாங்கத்தை உருவாக்கிய நாங்கள் தற்போது உங்களது பிரதேச அதிகாரத்தை கேட்கின்றோம். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். இன்று இன, மத ஐக்கியமும், நல்லுறவும் ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். பௌத்தம், இந்து, இஸ்லாம் மக்கள் ஒற்றுமையதாக வாழ்கிறார்கள். உங்களுடைய கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கு நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தாருங்கள்.

இந்த மாவட்டம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பிரதேசமாக இருக்கிறது. யுத்தத்தின் போதும் நீங்கள் வாழ்ந்தீர்கள். யுத்தம் முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வி கண்டுள்ளது. இப்பொழுது யுத்தம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். யுத்தம் காரணமாக இந்தப் பிரதேசத்தின் பொருளாதாரம் முற்று முழுதாக சீரளிந்து போயிருந்தது. சமூக இணக்கப்பாடு வீழ்ச்சி கண்டிருந்தது. பொருளாதார ரீதியாக வீழ்ச்சி கண்டிருந்த நாங்கள் தற்போது முன்னோக்கி செல்கிறோம். தென்மாகாண பொருளாதார துறை வீழ்ச்சி கண்டிருந்தது.

வடக்கிலும், தெற்கிலும் பொருளாதார துறை வீழ்ச்சி கண்டிருந்தது. அதை நாங்கள் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். தெற்கிலும், வடக்கிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வேலைத்திட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றோம். இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இந்த நாட்டில் வருமானம் இருந்ததில்லை.

கடனைப் பெற்றுத் தான் அவர்கள் அபிவிருத்திப் பணிகளைச் செய்தார்கள். அந்தக் கடனை செலுத்துவதற்கு அவர்கள் மீண்டும் கடனைப் பெற்றார்கள். அதனால் இந்த நாடு பொருளாதார ரீதியாக மிகவும் கடன் பிரச்சனைக்கு உள்ளாகியது. அந்தக் கடனை செலுத்துவதற்கு முன்னதாகவே நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டியிருந்தது. பொருளாதாரம் தோல்வி அடைந்த நிலையிலேயே இந்த ஆட்சியைப் பெற்றுக் கொண்டோம். தற்போது இந்த அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ளது. புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். தற்போது இந்தக் கடனைக் பொடுப்பதற்கு கடன்பெற வேண்டிய தேவை எங்களிடம் இல்லை. நாங்கள் தற்போது வேண்டுமான அளவுக்கு கடனை செலுத்துவதற்கு தகுதி பெற்றுள்ளோம். நாங்கள் அபிவிருத்திகளை ஆரம்பித்துள்ளோம். முதலாவது வருடத்தில் இந்த அபிவிருத்தி ஒரு நிலையான அபிவிருத்தியாக இருக்கிறது. தற்போது நாடு பூராகவும் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த மக்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். எதிர்பார்ப்புக்களுடன் இருப்பார்கள். இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். அதிகமான ஏற்றுமதி வருமானமாக 15 மில்லியன் ரூபாயை பெற்றுக் கொண்ட வருடமாக 2017 ஆம் ஆண்டு இருக்கின்றது. அதேபோல் தான் அதிகளவிலான அன்னியச் செலாவனியையும் இந்த நாடு பெற்றிருக்கின்றது. 1.5 மில்லியன் டொலர் அன்னிய செலாவணியை பெற்றுக் கொண்டிருக்கிறோம். இருந்த பொழுதும் நாம் இன்னும் தன்னிறைவு அடைய முடியாத நிலையில் இருக்கின்றோம். தொழில் வாய்ப்பு பிரச்சனையை தீர்க்க அன்னிய செலாவணியை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

கைத்தொழில் பேட்டைகள், சாந்தை வாய்ப்புக்கள், உல்வலாசப் பயணத்துறை, விவசாயத்துறை, சுயதொழில் துறை என்பவற்றை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. நாட்டில் தொழில் பிரச்சனையை மட்டும் தீர்த்து வைத்தால் போதாது. பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கான திட்டங்களை வகுகின்றோம். எல்லோருக்கும் வருமானம் பெறும் திட்டத்தை அரசாங்கத்தால் வழங்க முடியாது. அபிவிருத்தியை கொண்டு வர வேண்டும். கண்டியில் இருந்து மாத்தறை வரையிலான அதிவேக பாதைகளை அபிவிருத்தி செய்து வருகின்றோம். அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த காலங்களில் எவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதோ அதில் இருந்து விடுவித்து தற்போது அபிவிருத்தியைக் காண தொடங்கியிருக்கிறது. மத்தள விமான நிலையம் இந்திய நிறுவனத்தால் புனரமைக்கப்பட்டு செயற்படுகிறது. இலங்கையில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை என இரண்டு துறைமுகங்கள் தற்போது இருக்கின்றன. கட்டுநாயக்க, மத்தள என்னும் இரண்டு விமான நிலையங்கள் இருக்கிறது. நெடுஞ்சாலைகளை இணைப்பதன் மூலம் முக்கியமான பொருளாதார வலயங்களை ஆரம்பிக்க முடியும். அதனை நாங்கள் ஆரம்பித்து இருக்கின்றோம்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுடன் ஊடாக நகரங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். மூன்றாவது துறைமுகமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இருகிறோம். இதன் மூலம் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். வங்காளா விரிகுடவை மையர்படுத்தி அமைந்துள்ள திருகோணமலையின் அபிவிருத்தி பங்களாதேஸ், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளின் அபிவிருத்தியோடு இணைந்ததாக வரவிருக்கிறது. தமிழ்நாடு, ஓரிசா, பெங்களூர் போன்றனவும் இதன் மூலம் அபிவிருத்தி காணும். தற்போது சிங்கபூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையின் அபிவிருத்தி குறித்து திட்டங்களை வகுத்து வருகிறது. பீல்ட் மார்சல் பொன்சேனா அமைச்சர் அந்தப் பணிகளுக்கு பொறுப்பாக இருக்கின்றார். இதன் மூலம் இந்தியா, சிங்கப்பூர், யப்பான் போன்ற நாடுகளின் துறைமுகம் போன்று திருகோணமலை அபிவிருத்தி காணும். புதிய பாதைகளை அமைப்பதன் மூலம் வவுனியா மக்களும் திருகோணமலையால் நன்மை பெறலாம்.

வடகிழக்கை ஒருபோதும் நாங்கள் மறந்ததில்லை. கண்டி அம்பாந்தோட்டை போன்று கரையோர பிரதேசங்களை நோக்கி அபிவிருத்தி செய்து வருகின்றோம். நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள். நாங்கள் எல்லோரும் இந்த நாட்டில் வாழ உரிமையுடையவர்கள். 1977 ஆம் ஆண்டு நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி யுத்தம் காரணமாக வடக்கை வந்து சேரவில்லை. தென்பகுதியிலேயே நின்றது. தற்போது அதனை நாங்கள் இங்கும் கொண்டு வந்திருக்கின்றோம். புல்மோட்டையில் இருந்து வவுனியா வருவதற்கான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். வெலிஓயாவை அபிவிருத்தி செய்யவுள்ளோம். யுத்தத்தால் அழிந்து போன பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவோம். அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் மன்னார் பிரதேசத்தை உல்லாச பயணத்துறைக்குரிய பிரதேசமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதுடன் வன்னியின் அபிவிருத்தியைப் பலப்படுத்துவோம்.

இந்த அபிவிருத்திகளை காண்பதற்கு உங்களுடைய பிரதேசசபைகள், நகரசபைகளை எங்களிடம் தாருங்கள். நாங்கள் அபிவிருத்தி செய்கின்றோம். இந்த நிலையை மாற்றிக் காட்டுகின்றோம். 2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி காட்டுகின்றோம். வவுனியாவில் 5000 வீடுகள் வழங்குவது தொடபில் பேச்சுவார்த்தை நடத்தியிருகிறோம். பெண்களுக்கான தேவைபாடுகள் தொடர்பாகவும் பேசி வருகின்றோம். எனவே தான் பொருளாதார அபிவிருத்தி, விவசாய அபிவிருத்தி, உங்கள் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உங்கள் பிரதேச ஆட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியிடம் தாருங்கள். இதற்கு தேவையான பணத்தை எங்களால் மட்டுமே தேட முடியும் எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*