;
Athirady Tamil News

ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு டிரம்ப் ஆதரவு..!!

0

ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர். அரசுக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு அந்நாள் ஆட்சியாளர்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய மக்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், எட்டாவது ஆண்டாக கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், அமைதியான வழியில் போராடி வரும் அவர்களை அந்நாட்டு அரசு சிறையில் அடைத்து வருகிறது.

கடந்த 28-12-2017 அன்று நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாஷாட் நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. நாட்டின் 80 பெருநகரங்கள் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெருகி வருகின்றன.

நாட்டின் சில பகுதிகளில் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வங்கிகளும் தாக்குதலுக்குள்ளானதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஒருவார காலமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த போராட்டத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சுமார் ஆயிரம் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களை ஒடுக்க பெருமளவில் அரசுப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீதான அரசின் அடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று கருத்த தெரிவித்த டிரம்ப், ‘ஈரானில் ஊழல்வாதிகளின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்தபோது நான் அமைதியாக இருந்ததில்லை.

விடுதலைக்கான ஈரான் மக்களின் தீரமிக்க இந்த போராட்டத்தில் அவர்களுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும். மேலும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளை களையுமாறு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − four =

*