;
Athirady Tamil News

குவான்டனாமோ கொடுஞ்சிறை தொடர்ந்து செயல்படும்: உத்தரவில் கையொப்பமிட்டார் டிரம்ப்..!!

0

கியூபா நாட்டின் விரிகுடாவான குவான்டனாமோ பகுதியில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் அதிபயங்கர தீவிரவாதிகளை சித்ரவதைக்குள்ளாக்கும் குவான்டனாமோ சிறைச்சாலை அமெரிக்க அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள கைதிகளை சித்ரவதைக்குள்ளாக்கும் முறைகளை பற்றி உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து, நடைமுறை சாத்தியங்களை ஆய்வுசெய்து இந்த சிறைச்சாலையை மூடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒபாமாவின் அறிவிப்பை தவிடுபொடியாக்கும் வகையில் குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். மேற்கண்ட தகவலை அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுசபை கூட்டத்தில் அவர் அறிவித்தார்.

‘பொது மருத்துவமனை போன்ற இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் தீயசக்திகள் ஆவார்கள். சாத்தியப்படும் வேளையில் அவர்களை நாம் அழிப்போம். தேவைப்பட்டால், அவர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்தவும் வேண்டும்.

‘தீவிரவாதிகள் என்பவர்கள் வெறும் குற்றவாளிகள் அல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டவிரோதமான எதிரி போர்ப்படைகள். இப்படிப்பட்டவர்கள் கடல் கடந்து பிடிபடும்போது, அவர்களை தீவிரவாதிகளாகவே நாம் நடத்த வேண்டும்.

நூற்றுக்கணக்கான பயங்கர தீவிரவாதிகளை முந்தைய அரசு முட்டாள்தனமாக விடுதலை செய்தது. இதன் விளவு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் பக்தாதி போன்றவர்களை மீண்டும் போர்க்களத்தில் நாம் சந்திக்க நேர்ந்தது. எனவே, எனது இன்னொரு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நமது ராணுவத்தின் கைது நடவடிக்கைகளை மறுசீராய்வு செய்யவும், குவான்டனாமோ சிறைச்சாலை தொடர்ந்து திறந்திருக்கும் வகையிலும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ்-க்கு உத்தரவிட்டு இன்று கையொப்பமிட்டுள்ளேன்.

ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், நாம் விரட்டிப் பிடிக்கும் தீவிரவாதிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை நமது பாராளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்’ என டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*