;
Athirady Tamil News

ரஷியா, சீனாவுக்கு இணையாக அமெரிக்காவும் அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும்: டிரம்ப்..!!

0

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உரையாற்றினார்.

நாட்டின் பல்வேறு துறைகளை சீரமைப்பது தொடர்பான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய டிரம்ப், ‘உலகம் முழுவதும் நேர்மையற்ற ஆட்சிகளையும், நமது நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட மதிப்பீடுகளை சீர்குலைக்க சவால்விடும் சீனா, ரஷியா போன்ற எதிரிநாடுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த சவால்களை முறியடிப்பதற்காக, ஒப்புயர்வில்லாத வல்லமையை நாம் பெற வேண்டியுள்ளது. இந்த ஆபத்துகளை முறியடிக்க வேண்டுமானால் பலவீனமான அணுகுமுறை நிச்சயமாக நம்மை பிரச்சனைக்குள் சிக்க வைத்துவிடும். ஒப்புயர்வில்லாத ஆயுத வல்லமை மட்டும்தான் நமது தற்காப்புக்கான நிச்சயமான நிவாரணமாக அமையும்.

நமது தற்காப்புக்காக அணு ஆயுத தயாரிப்பை நாம் நவீனப்படுத்தி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். ராணுவ செலவினங்களுக்கான உச்சவரம்பை கருத்தில் கொள்ளாமல் இதற்கு தேவையான நிதியை நாம் முழுமையாக ஒதுக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 18 =

*