;
Athirady Tamil News

தலைவர் வழிகாட்டிவிட்டமைக்காக நாம் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம்…!! (படங்கள்)

0

தலைவர் வழிகாட்டிவிட்டமைக்காக நாம் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம் அங்கஜன்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்ற குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பா ம உ அங்கயன் கலந்து கொண்டார். இதன்போது கிராம மட்டத்தில் ஜனாதிபதியின் நேரடி செயற்பாட்டாளர்களிற்கான ஜனாதிபதி ஒப்பமிட்ட சான்றிதள்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் குறிப்பிடுகையில்,
நாங்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து வந்தோம். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று உரிமைக்காக வாக்களித்திருந்தோம். மற்றயது தலைவர் உருவாக்கிவிட்ட கட்சி என்பதற்காக வாக்களித்திருந்தோம். ஆனால் நாம் வாக்களித்து அனுப்பியவர்கள் எதையும் சாதித்துள்ளதாக தெரியவில்லை.

தலைவர் வழிகாட்டிவிட்டமைக்காக நாம் வாக்களித்தோம். ஆனால் நாம் வாக்களித்தது எதற்காக என்பது தெரிகின்றது. நாங்கள் வாக்களித்த காரணமும் விளங்குகின்றது. ஆனால் அவர்கள் பயணித்துகக்கொண்டிருக்கும் திசை சரியா பிழையா என்பதுவே கேள்வியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + nineteen =

*