;
Athirady Tamil News

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய கட்டம்…!!

0

வருடந்தோறும் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அவை தொடர்பான ஆவணங்களை முறையாகப் பாதுகாப்பதற்காக இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்துக்கு நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத்தில் 3.5 மில்லியன் ஆவணங்களை மாத்திரமே பாதுகாத்து வைக்க முடியும். எனவே பாவனைக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை முறையாக அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் முடிவுறாத வாகனங்களின் ஆவணங்கள் எவையும் அகற்றப்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*