;
Athirady Tamil News

குளிர்பானத்திற்கு அடிமையானவரா நீங்கள்? இவருக்கு நேர்ந்த பரிதாபத்தை பாருங்கள்..!!

0

அயர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தொடர்ந்து குளிர்பானத்தைக் குடித்து வந்ததால் பற்களை இழந்துள்ளார்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் ஷெரிடன், இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன, மைக்கேலுக்கு குளிர்பானம் என்றால் உயிர்.

அதனால் தினமும் 6 லிட்டர் வரை, குளிர்பானத்தை குடித்து வந்துள்ளார். தொடர்ந்து குடித்து வந்ததால், அரைமணி நேரம் குடிக்காமல் விட்டாலும் இவருக்கு தலைவலி, நடுக்கம் ஏற்பட்டுவிடும்.

எனவே, தலைவலிக்காகவே தினமும் குளிர்பானத்தை குடித்து வந்துள்ளார், இதனால் இவரின் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கின.

மேலும், எந்த உணவையும் சாப்பிடவோ, சூடான பானம் எதையும் குடிக்கவோ முடியாமல் போனதுடன், உடல்நலமும் பாதிக்கப்பட்டது.

இவர் தனது நிலையால் மனைவி, குழந்தைகளுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.இதுகுறித்து மைக்கேல் ஷெர்டன் கூறுகையில், யாரிடமும் பேசுவதற்கு வெட்கமாக இருந்தது, பற்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசவும், சிரிக்கவும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய பேச்சு யாருக்கும் புரியாமல் போனது.

ஒரு குளிர்பானம் என்னை இவ்வளவு மோசமாக அடிமைப்படுத்தும் என்றோ, என் பற்களைச் சிதைக்கும் என்றோ நான் அறியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் எனக்கு விபரீதம் புரிந்தது, மதுவை விட இது மிகவும் மோசமான பழக்கம் என்பதை உணர்ந்தேன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − three =

*