;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட மம்மி உடல் யாருடையது?..!!

0

சுவிட்சர்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட மம்மியின் உடல் பிரித்தானியா வெளிவிவகாரத்துறை செயலர் போரிஸ் ஜான்சனின் மூதாதையர் உடையது என தெரியவந்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் Baselஇல் உள்ள Barfüsser தேவாலயத்தின்கீழ் புதுப்பிப்பு வேலைகள் நடக்கும்போது மம்மி உடல் கண்டெடுக்கப்பட்டது.

1787 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட அந்தப் பெண்மணியின் உடல் யாருடையது என்பது நீண்ட காலமாக மர்மமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் அந்த உடல் Anna Catherina Bischoff என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

மேலும் அவருடைய DNAவை பரிசோதித்தபோது அவருடைய இறப்பிற்கு பாதரசம் காரணம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவரது உடல் கெட்டுப்போகாமல் இருந்ததற்கும் இதுவே காரணம் என தெரியவந்துள்ளது.

பயங்கர நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்த Anna Catherina Bischoffக்கு பாதரசம் மருந்தாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு போதகரின் மகளான Annaவின் பிள்ளைகளில் ஒருவர் Boris Johnsonஇன் குடும்பத்தில் ஒருவரை மணமுடித்துள்ளார், பிரித்தானிய அமைச்சர், ”மம்மியின்” ஆறாவது தலைமுறைப் பேரன் ஆவார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − five =

*