;
Athirady Tamil News

அகதிகளை ஏற்க மறுக்கும் ஜேர்மன் நகரம்: விரைவில் வாக்கெடுப்பு..!!

0

ஜேர்மனியின் Freiberg நகரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அகதிகள் வருகையைத் தடை செய்வதா வேண்டாமா என்பது குறித்து அறிவதற்காக வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் சுரங்கத் தொழிலுக்கு புகழ்பெற்ற நகரம் Freiberg, தற்போதைய நிலவரப்படி இந்நகரில் 2000 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் வசிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் தோராயமாக 5 சதவிகிதமாகும்.இந்நிலையில் பள்ளிகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அகதிகள் வருகையை தடை செய்வதா வேண்டாமா என்பது குறித்து அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வருகிற பிப்ரவரி 1ம் திகதி பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.வெற்றிகரமான ஒருமைப்பாட்டிற்காக இதுவரை உழைத்த உழைப்பு வீணாய்ப் போய்விடக்கூடாது என்று கூறிய Freibergஇன் மேயர் Sven Krüger, அவசரத் தேவைகளை கவனிப்பதற்காக தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 12 மாதங்களில் ஏராளமான பிள்ளைகள் வந்து குவிந்துவிட்டதால், அவர்களுக்கு சட்டப்பூர்வமான கல்வியை வழங்க இயலவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் Brandenburgஇலுள்ள Cottbus நகரில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவங்களும் அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளும் இம்முடிவை எடுப்பதற்கு மற்றொரு காரணங்களாக அமைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + eighteen =

*