;
Athirady Tamil News

4 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி கூறிய விசித்திர காரணம்..!!

0

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 32 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சல்போர்ட் நகரை சேர்ந்தவர் கொன்ரட் பிரிட்சர்ட் (22). இவர் கடந்தாண்டு யூன் மாதம் 25-ஆம் திகதி தனது மூன்று நண்பர்களுடன் மதுவிடுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்தும் குடித்துள்ளார். அப்போது வீட்டு மாடிக்கு சென்ற பிரிட்சர்ட் அங்கிருந்த 4 வயது சிறுமியை தூக்கி கொண்டு வந்து பலாத்காரம் செய்துள்ளார்.சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அவரின் தாய் துரத்தி சென்று பிரிட்சட்டை பிடித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் பிரிட்சர்ட்டை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை 18 வயதான குழந்தை காப்பாளர் என நினைத்ததாக விசித்தர காரணத்தை பிரிட்சட் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இது ஏற்று கொள்ளக்கூடிய காரணம் கிடையாது என நீதிபதி அதை நிராகரித்துவிட்டு அவருக்கான தண்டணை விபரத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி பிரிட்சட்டுக்கு 32 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஏற்கனவே பிரிட்சட் மீது கடையில் திருடிய குற்றச்சாட்டு உள்ளதால் அதற்கு தனியாக 8 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*