;
Athirady Tamil News

பனிச்சறுக்கு விளையாட்டில் நேர்ந்த விபரீதம்: 2 உயிர் பரிதாப பலி..!!

0

சுவீடனில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடனின் மொடலா நகர் பகுதியில் உள்ள ஸ்ட்ரேகன் ஏரியில் இரண்டு பிரேதங்கள் மிதப்பதாக மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் மீட்புப் படையினர், ஏரியில் உறைந்து கிடந்த இரண்டு பிரேதங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து இடம்பெற்ற விசாரணையில், 50 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் ஏறிப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் விளையாட்டின் போது இருவரும் தவறுதலாக ஏறியில் விழுந்து இருக்கலாம் என்றும், ஏறியின் நீர் மிகவும் உறைந்திருந்ததால் இருவரும் உறைந்திருக்க கூடும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலியான இருவரின் உறவினர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 19 =

*